கலால் வரி கொள்கை முறைகேடு சிசோடியாவிடம் சிபிஐ 9 மணிநேரம் விசாரணை

புதுடெல்லி: கலால் வரி கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா நேற்று ஆஜரானார். மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக,டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், சிபிஐ அலுவலகத்தில்  நேற்று ஆஜராவதற்கு முன்பு காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தனது வீட்டில் இருந்து திறந்த காரில் தொண்டர்கள் புடைசூழ சென்றார். தொண்டர்களுடன் ராஜ்காட்டுக்கு சென்ற அவர் அங்கு  உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, சிபிஐ அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றபோது தொண்டர்கள் அலுவலக நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பின் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் சிசோடியா ஆஜரானார். சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். சிசோடியா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தம் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் சிபிஐ ஈடுபட்டு வருகிறது. குஜராத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதை தடுப்பதே ஒன்றிய அரசின் நோக்கம்.மேலும், என்னை சிறையில் தள்ள பாஜ திட்டமிட்டுள்ளது. கைதுக்கு பயப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.சிசோடியாவிடம் 9 மணி ேநரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் அளித்த பதில்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு திருப்திகரமாக இல்லை என தகவல்கள் வெளியாகின.* ஆம் ஆத்மி எம்பி காயம்சிபிஐ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி எம்பியும் பங்கேற்றார். போலீசாருடன் நடந்த தள்ளு முள்ளுவில்  அவர் காயம் அடைந்தார். சஞ்சய் சிங்கை போலீசார் குண்டு கட்டாக துாக்கி சென்றனர்….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்