கலவை ஒத்தவாடை தெருவில் உள்ள ஆபத்தான மின் கம்பம் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரம்

கலவை :  கலவையில் ஒத்தவாடை தெருவில் உள்ள ஆபத்தான மின் கம்பம் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் உதவி செயற்பொறியாளராக கோமளவல்லி பணியாற்றி   வருகிறார். மின் அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களில் மின் உயர் கம்பத்தில் உள்ள கம்பிகள் தாழ்வாக செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதன்படி, கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட திமிரி  சாலையிலுள்ள ஒத்தவாடை தெருவில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு  செல்லும் மின் வயர் அருகே சிமெண்ட் மின் கம்பம் ஒரு வருடத்திற்கு முன்பு சிதிலமடைந்தது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்தனர். பின்னர், அப்பகுதி  பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மின் அலுவலகத்திற்கு சென்று புகார் மனுவாக வழங்கினர். அதைத்தொடர்ந்து  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு  கம்பத்தை மாற்றுவதாக புதிய சிமெண்டால் ஆன கம்பம் நடப்பட்டது. கம்பம் மட்டுமே நடப்பட்டு உள்ளதால் மின் வயர் மாற்றப்படாமல் இருந்து வந்தது. அந்தரத்தில் மின் கம்பம் சிதிலமடைந்து இருப்பதால்  இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி நேற்று வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியாக நேற்று கலவை மின் வாரிய அலுவலர்கள் கலவை ஒத்தவாடை தெருவில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை மாற்றி சீரமைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். …

Related posts

மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேல் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத தென் மேற்கு பருவ மழை

மு.பரூர் வரதராஜபெருமாள் கோயிலில் மாடுகள் கட்டுவதால் சுகாதார சீர்கேடு

மானாமதுரை ரயில்நிலையத்தில் 2 ஆண்டுகளாக செயல்படாத ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ ஸ்டால்