கலவை அருகே ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கலவை:  கலவை  தாலுகாவுக்குட்பட்ட  கிராமத்தில் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.கலவை அடுத்த வளையாத்தூர் கிராமத்தில், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் வளையாத்தூர் ஏரி  உள்ளது. இதில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளில் பலர்  ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை ஆக்கிரமிப்பில்  உள்ளவர்களுக்கு எடுத்துக்கூறியும் அவர்கள் எவ்வித பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தனர்.மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் வழங்கினர்.  மற்றும் விஏஓ அலுவலகத்திலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.   இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பொதுப்பணித்துறை  உதவி பொறியாளர் ராஜேந்திரன், தலைமையிலான பொதுப்பணி ஊழியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் போலீசார் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை