கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் மாநில போட்டிகளில் அசத்தல்

திருவில்லிபுத்தூர், செப்.6: திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் மாநில அளவிலான ஃபின்ஸ் நீச்சல், குத்துச் சண்டை, கைப்பந்து, கால்பந்து போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் கோப்பையை வென்றனர். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஃபின்ஸ் நீச்சல் போட்டியில் பல்கலை நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டு 9 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்றனர். சென்னை மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற தென் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் பல்கலைக் கழக குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டு 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனர். ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பல்கலைக்கழக கைப்பந்து வீரர்கள் கலந்து கொண்டு ரொக்கப் பரிசுத் தொகை ரூ.10,000 மற்றும் கோப்பையையும் பெற்றனர்.

மதுரையில் நடைபெற்ற, மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் பல்கலைக்கழக கால்பந்து அணியினர் கலந்து கொண்டு 3 மற்றும் 4ம் இடத்தைப் பெற்று ரொக்கப் பரிசுத் தொகை முறையே ரூ.6,000, ரூ.4,000 பெற்று வெற்றிக் கோப்பையைப் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பல்கலை வேந்தர் தரன், இணைவேந்தர் அறிவழகிதரன், துணைத் தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நல இயக்குநர் சாம்சன் நேசராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் விஜயலட்சுமி, சிதம்பரம் மற்றும் உதயகுமார் ஆகியோர் பாராட்டினர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை