கலக்கத்தில் கட்சி மாறிகள்

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின்போது மட்டுமின்றி தேர்தல்  தேதி அறிவிப்புக்கு பிறகும் தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த  சிலர் அதிரடியாக கட்சி மாறினர். தாங்கள் விரும்பிய தொகுதியில் போட்டியிட  வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர். ஆனால் தற்போது நிலைமை  தலைகீழாய் மாறும் நிலை இருப்பதால் கலக்கத்தில் உள்ளனர். தொகுதி  எண்ணிக்கை உடன்பாடே சில கூட்டணியில் இன்னும் முடிவாகாத நிலையில், எந்தெந்த  தொகுதிகள் என்பதிலும் பிரச்னை நீடிக்கிறது. இதனால் கடந்த 2 மாதத்தில்  புதுச்சேரியில் கட்சி மாறிய பிரபலங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  தாங்கள் போய் சேர்ந்த கட்சியிலேயே எதிர்ப்பு கோஷ்டி போர்க்கொடி தூக்கி,  தொகுதியில் மாற்று நபரை களமிறக்க வேண்டுமென வலியுறுத்துவதால் பிரச்னைக்கு  முற்றுப்புள்ளி வைக்க அந்த தொகுதியை மாற்றுக் கட்சிக்கு தள்ளிவிடலாமா? என்ற  கணக்கையும் அரசியல் கட்சிகள் கையில் வைத்திருப்பதால் பதற்றத்தில் கட்சி  மாறிகள் புலம்புவதாக தகவல் உலாவுகின்றன….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு