கறம்பக்குடி வட்டார மருத்துவ அளவில் 8,920 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கறம்பக்குடி, மார்ச்4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் வட்டார மருத்துவ அளவில் தமிழக அரசின் போலியோ நோய் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கின்படி நேற்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அரசு அறிவிப்பின்படி கறம்பக்குடி வட்டார மருத்துவ அளவில் 111 போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருள் அகமது தலைமை யில் மருத்துவர்கள் மேற்பார்வையில் 5 வயதிற்குட்பட்ட 8,920 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க பட்டன.

கறம்பக்குடி வட்டார மருத்துவ அளவில் நடைபெற்ற இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுகாதாரதுறையின் சார்பாக போலியோ நோய் இல்லாத தமிழ்நாடை உருவாக்குவதற்கு முயற்சிகள் அனைத்தும் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்