கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு கூட்டம்

கறம்பக்குடி,ஜூலை 30: கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முருகேசன் தலைமை வகித்தார். அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜேசுராஜ் அறிக்கை வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் திருஞானம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட மயிலாடி தெரு கிராமத்தில் உள்ள 20 குடும்பங்களுக்கு அரசு தனி நபரிடம் நிலம் பெற்று பட்டா வழங்காமல் 5 ஆண்டு காலமாக, காலம் தாழ்த்துகிறது. உடனடியாக அவர்களுக்கு பட்ட வழங்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதுவரை திருமணஞ்சேரி வழியாக கருக்கா குறிச்சி வழியாக செல்லும் சாலை சீராமைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பயன்பாடிற்கு விட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்