கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தால் தாய், குழந்தை எச்ஐவியால் பாதிப்பு: இழப்பீடு கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கடந்தாண்டு கர்ப்பம் ஆனேன். பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்துவிதமான பரிசோதனைகளையும் மேற்கொண்ேடன். எனது உடலில் ரத்தம் குறைவாக இருப்பதால், மதுரை ரிசர்வ் லயன் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதன்படி, கடந்த 21.12.2020ல் ரத்தம் ஏற்றப்பட்டது. அப்ேபாது உடலில் நடுக்கம் ஏற்பட்டதால் ரத்தம் ஏற்றுவதை நிறுத்தினர். உடல் பலவீனமாக இருப்பதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். அங்கு மீண்டும் ரத்தம் ஏற்றப்பட்டது. கடந்த டிச. 23ல் சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகு நானும், குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தோம். இதனிடையே, கடந்தாண்டு நவம்பர் முதல் எனது உடல் எடை குறையத் துவங்கியது. இதன்பிறகு எனக்கும், என் குழந்தைக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.தவறான முறையில் எச்ஐவி பாதித்த ரத்தத்தை ஏற்றியதால் தான் நானும், என் மகனும் எச்ஐவியால் பாதித்துள்ளோம். மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் இது நடந்துள்ளது. இதற்கு காரணமான மருத்துவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், எனக்கும், என் மகனுக்கும் தேவையான உயர் சிகிச்சையை அளிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவிற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், மதுரை கலெக்டர், மதுரை அரசு மருத்துவமனை டீன் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  மார்ச் 7க்கு தள்ளி வைத்தார். …

Related posts

இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது: வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்!

பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால் தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு இவ்வளவு அலட்சியப் போக்கை காட்டுகிறதா?: நாடாளுமன்றத்தில் துரை வைகோ கேள்வி