கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய வாலிபருக்கு நீதிமன்ற உத்தரவின்படி காதலியுடன் திருமணம்-புதுகை கோர்ட் வளாகத்தில் உள்ள கோயிலில் நடந்தது

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் காதலித்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய வழக்கில் காதல் ஜோடிக்கு நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கிபட்டியை சேர்ந்த கஸ்தூரி. இவரது தூரத்து உறவினர் ராம்கி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கஸ்தூரி இரண்டு மாத கர்ப்பமானார். மேலும் கஸ்தூரியை திருமணம் செய்ய ராம்கி மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கஸ்தூரி கடந்த 29-4-21ஆம் தேதி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்கியை கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கு கடந்த மதம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது ராம்கி ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர், ராம்கி- கஸ்தூரியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லை என்றால் ராம்கி சிறைக்கு செல்ல நேரிடும் என்று எச்சரித்ததோடு இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காணவேண்டும் என்று இருதரப்பினரையும் வக்கீல்களோடு சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். சமரச பேச்சுவார்த்தையில் கஸ்தூரியை திருமணம் செய்த கொள்ள ராம்கி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலேயே உள்ள விநாயகர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் கஸ்தூரிக்கு ராம்கி தாலி கட்டினார். இந்த திருமண விழா துப்பாக்கி ஏந்திய போலீஸ் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையிலும் இருதரப்பு உறவினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.இரண்டு தரப்பின் உறவினர்கள் கூடியிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் கூறி ஆசீர்வதித்தனர். செய்தனர். இதன் பின்னர் இருவரையும் மாவட்ட முதன்மை நீதிமன்ற அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு