கர்நாடக வியாபாரிகள் வராததால் குந்தாரப்பள்ளியில் ஆடு விற்பனை மந்தம்

வேப்பனஹள்ளி செப்30: கர்நாடக வியாபாரிகள் வராததால், குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடு விற்பனை டல் அடித்தது. காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க கூடாது என கர்நாடகா முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கர்நாடகாவில் தொழிற்சங்கங்கள் முழு பந்த் அறிவித்திருந்தனர். இதையொட்டி, கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார், கேஜிஎப் ஆகிய நகரங்களுக்கு, கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனஹள்ளி வழியாக இயக்கப்படும் பஸ்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. மேலும், வேப்பனஹள்ளிக்கு வரக்கூடிய கர்நாடக பஸ்களும் வராததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். வேப்பனஹள்ளி அருகே குந்தாரப்பள்ளியில், வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் சந்தை பிரசித்தம். இச்சந்தைக்கு கர்நாடக வியாபாரிகள் ஏராளமானோர் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். நேற்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக வியாபாரிகள் வராததால் ஆடு விற்பனை மந்தமாக நடைபெற்றது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’