கர்நாடக பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ஜெரோனியம் மலர்கள்

ஊட்டி, செப். 26: ஊட்டி அருகே பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக மாநிலம் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில், பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் சீசன் என்பதால், இங்குள்ள பசுமை குடிலில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ள தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கந்த சஷ்டி செல்கின்றனர். தற்போது இந்த பசுமை குடிலில் பல வண்ணங்களை கொண்ட ஜெரோனியம் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு, வெள்ளை, ஊதா உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் இந்த ஜெரோனியம் மலர்கள் பூத்து காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிப்பது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும் இந்த பூங்காவில் உள்ள பல்வேறு வகையான மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச்செல்கின்றனர்.

 

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது