கர்நாடகா மாநில தொழிலாளர்களுக்கு இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை

 

கிருஷ்ணகிரி: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரியும் கர்நாடகா மாநில தொழிலாளர்களுக்கு இன்று (10ம் தேதி) சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்று (10ம்தேதி) நடைபெறவுள்ளதால், சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அறிவுரையின்படி, தமிழகத்தில் பணிபுரிந்து வரும் கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

அம்மாநிலத்தை சேர்ந்த வாக்குரிமை உள்ள அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்க வசதியாக இன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நூற்பாலைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்தில் எந்தவித பிடித்தமும் செய்யாமல் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை