கர்நாடகா ஆளுநர் கெலாட் பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் 19வது ஆளுநராக தாவர்சந்த்  கெலாட் பதவியேற்றார்.    கர்நாடக  மாநில ஆளுநராக இருந்த விஆர்.வாலாவின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து, இம்மாநிலத்தின் புதிய ஆளுநராக தாவர் சந்த் கெலாட்டை ஜனாதிபதி நியமித்தார். பெங்களூரு ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில், அவருக்கு கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா பதவி  பிரமாணம் செய்து வைத்தார். மாநிலத்தின் 19வது ஆளுநராக பதவியேற்ற தாவர்  சந்த் கெலாட், கடவுள் பெயரால் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அவருக்கு முதல்வர் எடியூரப்பா,  எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். ஆளுநர் தாவர்சந்த் ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தவர். சமீபத்தில், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பதவியை ராஜினாமா செய்தார்….

Related posts

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்