கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் 2,010 பேருக்கு கொரோனா தொற்று: மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 2,010 பேருக்கு கொரோனா ெதாற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாசிடிவ் இந்தியாவிலும் ஆதிகம் செலுத்தியது. நோயை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்ெகாண்டுவந்ததின் பலமாக ஓரளவுக்கு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 5 மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருந்ததுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.  இதனிடையில் கடந்த வாரம் ஆயிரத்ைத தாண்டி இருந்த கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மூன்று நாட்களாக குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு மாநகரில் 1,280 பேருக்கும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 730 பேர் என்ற வகையில் 2,010 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 9,73,657ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பெங்களூருவில் 399 மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 677 என மொத்தம் 1,076 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 9,45,594ஆக உள்ளது. பெங்களூருவில் 3, ஹாசன் மற்றும் கல்புர்கி மாவட்டங்களில் தலா 1 என்ற வகையில் நேற்று 5 பேர் சிகிச்ைச பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,449ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடராமல் தடுக்க வேண்டுமானால், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கோவிட்-19 விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மத்திய, மாநில சுகாதார துறை பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். பெங்களூருவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அது மேலும் பரவாமல் தடுக்க ேதவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்