கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..ஹிஜாபை அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்!!

பெங்களூரு : கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபை அகற்ற மறுத்து போராட்டத்தில் இறங்கினர். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கல்வி நிறுவனங்களுக்கு மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த திங்கள் அன்று 9 மற்றும் 10ம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. தும்கூர், விஜயபுரா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து கொண்டு இஸ்லாமிய மாணவிகள் வருகை தந்தனர். பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியும் ஹிஜாபை அகற்ற மறுத்த அவர்கள், போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயபுராவில் கல்லூரி ஒன்றில் ஹிஜாபுடன் வகுப்புக்கு சென்று அமர்ந்து கொண்ட மாணவிகள் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் பல இடங்களில் இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவில்லை. போராட்டங்களை தடுக்க கர்நாடகாவில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்