கரூர் வேலாயுதம்பாளையம் அருகே தனியார் சர்க்கரை ஆலை ஊழியர் மாயமா? கடத்தலா?

வேலாயுதம்பாளையம், ஜூலை 16: கரூர் மாவட்டம் புகளூர் ஈஐடி பாரி காலனியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (58). இவரது மனைவி மாரியம்மாள் (54). இவர்களது மகன் நரேஷ்குமார் (33). இவர் புகளூர் செம்படாபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் டிப்ளமோ ட்ரெயினிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் இருந்த நரேஷ் குமார் தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நரேஷ்குமாரை பெற்றோர் பார்த்தபோது வீட்டில் இல்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால், நரேஷ்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து நரேஷ் குமாரின் தந்தை ராமகிருஷ்ணன் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு வேலாயுதம்பாளையம் போலீஸ் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீஸ் எஸ்ஐ சரவணன் வழக்கு பதிவு செய்து நரேஷ் குமார் தானாக எங்காவது சென்று விட்டாரா? அல்லது வெளியில் இருந்த போது அவரை யாரேனும் கடத்திச் சென்றுவிட்டானரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்