கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே சுகாதார வளாகம் அமைக்கப்பட வேண்டும்

கரூர், ஏப். 21: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே சுகாதார வளாகம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி, திண்டுக்கல் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து பேரூந்துகளும், வாகனங்களும், அமராவதி ஆற்றுப்பாலத்தை தாண்டி லைட்ஹவுஸ் கார்னர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கும், பேரூந்து நிலையத்துக்கும் சென்று வருகிறது.

லைட்ஹவுஸ் கார்னர் பகுதியை சுற்றிலும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், அரசுப் பள்ளி போன்றவை உள்ளது. மேலும், இந்த பகுதியில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம், ஜவஹர் பஜார், திரையரங்குகள், கரூர் மாரியம்மன் கோயில், அரசு அருங்காட்சியகம், மார்க்கெட் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இறங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

முக்கிய சந்திப்பு பகுதியாகவும், கருர் மாநகரின் நுழைவு வாயிலாகவும் லைட்ஹவுஸ் கார்னர் பகுதி உள்ளது. ஆனால், இந்த பகுதியில் சுகாதார வளாகம் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, அவசரத் தேவைக்கு நீண்ட து£ரம் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, இந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, சுகாதார வளாகம் அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை