கரூர் ராயனூர் பகுதியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி துவங்க நடவடிக்கை வேண்டும்

கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாந்தோணிமலைக்கு அடுத்ததாக வளர்ந்து வரும் பகுதியாக ராயனூர் உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் அதிகளவு உள்ளன. மேலும், கரூரில் இருந்து திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனூர் வழியாகவே சென்று வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த பேரூந்து நிலையமும் ராயனூர் பகுதியில்தான் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தளவுக்கு கரூர் மாநகராட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராயனூர் உள்ளது. ஆனால், இந்த சாலையின் வழியாக அதிகளவு பேருந்து வசதிகள் குறைவாக உள்ளதோடு, ஒருசில ஏடிஎம்களே உள்ளன. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தாந்தோணிமலை, கரூர், காந்திகிராமம் போன்ற பகுதிகளுக்குதான் சென்று வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்