கரூர் ரத்தினம் சாலை வழியாக செல்லும் வாய்க்கால் ஓரம் தடுப்புச்சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்து

கரூர் : கரூர் ரத்தினம் சாலையின் வழியாக செல்லும் வாய்க்கால் ஒரத்தில் தடுப்புச் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சி பகுதியில் இருந்து பசுபதிபாளையம், சோமூர், நெரூர், வாங்கல், கரூர் ரயில்வே நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சர்ச் கார்னர், ரத்தினம் சாலை வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், ரத்தினம் சாலையில் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் அருகே எந்தவித தடுப்புகளும் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் வேகமாக வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் வாய்க்காலில் விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.எனவே, வாய்க்கால் அருகே பாதுகாப்பு கருதி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தடுப்பு அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது….

Related posts

நாகர்கோவில் மாநகர பகுதியில் 10 இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங்

மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில் விழாவில் பெண்கள் சட்டிச்சோறு சுமந்து ஊர்வலம்

திருப்போரூர் அருகே டாம்ப்கால் மருந்து நிறுவனத்தில் தீ விபத்து