கரூர்-முக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

 

கரூர், அக்.5: கரூரில் இருந்து முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் நலன் கருதி கூடுதலாக வேகத்தடை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை செல்லும் சாலையில், வெங்ககல்பட்டி மேம்பாலம் இறக்கத்தில் இருந்து இடதுபுறம் முக்கணாங்குறிச்சி போன்ற பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.

குறுகிய நிலையில் உள்ள இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையில் அதிகளவு வளைவுப் பகுதி உள்ள நிலையில், வேகத்தடை அமைக்காத காரணத்தினால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு வேகத்தடை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை