கரூர் மாவட்ட பகுதிகளில் செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும்

 

கரூர், மே 28: கரூர் மாவட்ட பகுதிகளில் செல்போன் பேசியபடி இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாநகராட்சியை ஒட்டி கரூர்-சேலம், கரூர்- திருச்சி, மதுரை மற்றும் நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. மேலும், கரூர் மாவட்டத்தில் மாவட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் மாவட்ட சாலைகள் அதிகளவு உள்ளன. இந்நிலையில், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் செல்போன் பேசியபடி வாகனங்களில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கிச் செல்லும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும், ஹெல்மட் இன்றி வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது போன்ற பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இருப்பினும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் செல்போன் பேசியபடியே வாகனத்தை ஓட்டிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு