கரூர் மாவட்ட கலெக்டர் வழங்கல் கரூர் செங்குந்தபுரம் சாலையில் கனரக வாகன நிறுத்தத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

 

கரூர், ஜூலை 17: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் செல்லும் சாலையில் கனரக வாகன நிறுத்தம் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் ஜவுளி, பஸ்பாடி, கொசுவலை போன்ற முக்கிய மூன்று தொழில்களை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. இதில், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம் போன்ற பகுதிகளில் அதிகளவு உள்ளன. இதன் காரணமாக வாகன போக்குவரத்தும் அதிகமாக இந்த சாலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த சாலையில் சரக்கு போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் இந்த சாலையோரம் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதோடு, கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இவ்வழியை பயன்படுத்த முடியாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை