கரூர் மாவட்டத்தில் மளிகை, டீ கடைகளில் குட்கா விற்ற 5 பேர் மீது வழக்கு

 

கரூர், டிச. 12: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக 5 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்ட எஸ்பி நேரடியாக கடைகளில் சோதனை நடத்திய சம்பவமும பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், நேற்று முன்தினம், தாந்தோணிமலை, வெள்ளியணை, க.பரமத்தி, தோகைமலை, வெங்கமேடு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 5 பேர் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 300 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை