கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா கோலாகலம் 2வது நாளாக அக்னிசட்டி, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

கரூர், மே 29: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழாவினை முன்னிட்டு நேற்று காலை இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழாவுக்கான கம்பம் நடும் விழா மே 12ம்தேதி அன்று நடைபெற்றது. தொடர்ந்து, 17 ம்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தின் முக்கிய கோயில் பண்டிகையாக உள்ள இந்த மாரியம்மன் கோயில் விழாவினை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி சுவாமி தரிசனம் செய்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில், வேண்டிக் கொண்ட பக்தர்கள் மே 26ம்தேதி முதல் 28ம்தேதி வரை மாவிளக்கு மற்றும் பால்குடம் எடுத்துக் கொள்ளலாம் எனவும், மே 27ம்தேதி முதல் 28ம்தேதி வரை அக்னி சட்டி, அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் நு£ற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்து தரிசனம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்றும் காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தி, காவடி எடுத்து கோயிலுக்கு வந்தும் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை