கரூர் மாநகர பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்

கரூர், ஜன.10: கரூர் மாநகர பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்தும் நான்கு மண்டலங்களாக பிரித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை காலம் முடிந்து தற்போது தென்மேற்கு பருவமழை காலம் நடப்பில் உள்ளது. மழை பெய்யாவிட்டாலும், சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கொசுக்களின் உற்பத்தி அதிகளவு இருந்து வருகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில் பகுதி மக்கள் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு, மாநகராட்சிக்குட்ப்டட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் அதிகளவு சீத்த முட்செடிகள் ஆக்ரமிப்பும் ஒரு காரணமாக உள்ளது. குப்பை தரம் பிரிப்பு மேலாண்மை மாநகர பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கொசுவினை முற்றிலும் அழிக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன்படி, வீடு தோறும் கொசு மருந்து அடிப்பது, அபேட் மருந்து வழங்குவது, குளோரினேஷன் கலந்த தண்ணீர் விநியோகம் செய்வது போன்ற பணிகளை விடாது மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, கொசு ஒழிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி