கரூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

கரூர், செப். 7: கரூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நான்கு மண்டலங்களாக பிரித்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர், இனாம்கரூர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் புறநகர்ப்பகுதிகள் அதிகளவு உள்ளன.

வடகிழக்கு பருவமழை துவங்கி தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புறநகர்ப்பகுதிகளில் இன்றைக்கும் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால், இந்த பகுதிகளில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி பொதுமக்களை பல்வேறு சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது. மாநகர பகுதிகிளல் தற்போது கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், மாநகராட்சிக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளான கொசு மருந்து தெளிப்பது, வீடுகள் தோறும் அபேட் மருந்து வழங்குவது போன்ற பணிகளை பணியாளர்கள் மூலம் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த பணிகளை மேலும் தீவிரப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்