கரூர்- மதுரை சாலையோரம் தேங்கிய மழை நீர் பொக்லைன் மூலம் அகற்றம்

 

கரூர், மே 22: கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் தேங்கியுள்ள மழைநீர் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. கருர் மாநகரைச் சுற்றிலும் வரலாறு காணாத அளவுக்கு நேற்று மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதே போல், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்திலும் தொடர் மழையின் காரணமாக அதிகளவு மழைநீர் சாலையோரம் குளம் போல தேங்கியிருந்தது. இதனால், போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, நேற்று சம்பந்தப்பட்ட துறையினர், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அதன் மூலம் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றினர். அதற்கு பிறகு சாலையில் எளிதான போக்குவரத்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்