கரூர் நீதிமன்றத்தில் லோக்அதாலத்

 

கரூ: கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் எனும் லோக் அதாலத்தில் 1412 வழக்குகளுக்கு ரூ.4.53 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது. இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேற்று) சனிக்கிழமை நடைபெற்றது. கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

மொத்தம் மூன்று அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, காசோலை மோசடி, விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக மனுக்கள் விசாரிக்கப்பட்டன. இதில் மொத்தம் 1905 வழக்குகள் எடு த்துக் கொள்ளப்பட்டதில், 1412 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ.4.53 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு உரிய நஷ்ட ஈடு தொ கை வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.பாக்கியம் செய்திருந்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை