கரூர் நகரில் மினிபேருந்துகள் முறைபடுத்தப்படுமா ? பயணிகள் எதிர்பார்ப்பு

 

கரூர், அக். 5: கரூர் மாநகரம் வழியாக பயணிக்கும் மினி பேருந்துகளின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகரின் மையப்பகுதியில் மினி பேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்த பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட மினி பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மினி பேரூந்து நிலைய வளாகம் குறுகிய நிலையில் உள்ளதால், பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்படுவதற்கு பதிலாக மாறி மாறி நிறுத்தப்படுவதால் தேவைப்படும் சமயங்களில் வெளியேறுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது.

மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் சில மினி பேருந்துகள் மாநகர பகுதிகளை மெதுவாக கடந்து செல்வதோடு, மற்றவர்களை தொந்தரவுக்கு உள்ளாக்கும் வகையில் அதிக ஒலியை எழுப்பியபடிச் செல்கிறது. இதனால் மற்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மினி பேருந்துகளின் செயல்பாடுகளை முறைப்படுத்த தேவையான சீரமைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை