கரூர் திருமாநிலையூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தனிவிமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வர் முக.ஸ்டாலின்

கரூர்: கரூர் திருமாநிலையூரில் 76 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, வங்கி கடன் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (2ம் தேதி) நடக்கிறது. இதில் பங்கேற்க சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில்பாலாஜி, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், அரசுத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் முதல்வர் கார் மூலம் கரூருக்கு செல்கிறார்.கரூர் செல்லும் வழியில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், வீரராக்கியம், வெங்ககல்பட்டி ஆகிய 4 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கரூர் பயணியர் மாளிகையில் இன்றிரவு தங்குகிறார். இதைதொடர்ந்து கரூர் பயணியர் மாளிகையில் இருந்து புறப்பட்டு விழா நடக்கும் திருமாநிலையூருக்கு நாளை காலை 10 மணிக்கு காரில் செல்கிறார். விழாவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரூர் கலெக்டர் அலுவலகம் முதல் திருமாநிலையூர் வரை வழிநெடுக சாலையின் இருபுறங்களிலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.இதைதொடர்ந்து திருமாநிலையூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 76 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மேலும் கரூர் புதிய பஸ் நிலைய பணிக்கு அடிக்கல் நாட்டும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது. கரூரில் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் நாமக்கல்லுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு செல்கிறார்….

Related posts

விமானத்தில் பயணிப்பவர்கள் மட்டும் மனிதர்கள் அல்ல; வழியனுப்ப வருபவர்களும் மனிதர்கள்தான்: ஐகோர்ட் கிளை கருத்து

கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்பு பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன்

நீட் விலக்கு பெற திமுக தொடர்ந்து முயற்சிக்கும்: கனிமொழி எம்.பி