கரூர்- சென்னை இடையே கூடுதலாக பேருந்துகள் இயக்கவேண்டும்

 

கரூர், பிப். 2: கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் மத்திய பகுதியாக கரூர் மாவட்டம் உள்ளது. கரூர் மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முக்கிய 3 தொழில்களை கொண்ட மாவட்டமாக கரூர் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதேபோல், தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கரூரில் இருந்து இரவு நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்ட நிலையில், தற்போது, அந்த பேருந்து வசதிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரூரில் இருந்து சென்னை அனைவரும் திருச்சி, சேலம் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சென்னை சென்று வருகின்றனர். எனவே, கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை