கரூர் க.பரமத்தி ஊராட்சியில் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு

 

க.பரமத்தி, செப். 16: நிலக்கடலை விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. க.பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இதில் அஞ்சூர், கார்வழி, மொஞ்சனூர், தும்பிவாடி, விசுவநாதபுரி, தொக்குப்பட்டி, கூடலூர் கிழக்கு, மெற்கு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட குக்கிராமங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை ஏராளமான ஏக்கர் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வந்தன.
இப்பகுதியில் விளையும் நிலக்கடலை இயற்கையிலேய அதிக சுவையுடன் இருக்கும் என்பதாலும், எண்ணெய் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கும் என்பதாலும் வியாபாரிகள் போட்டி போட்டு விவசாய நிலத்திலேயே கொள்முதல் செய்வார்களாம்.

இப்போதோ நிலைமை தலை கீழ். காரணம் போதிய மழையில்லாமல் நிலத்தடி நீர் மட்டம் அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் நிலக்கடலை ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் விவசாய பரப்பு குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் விதைப்பு செய்யும் விவசாயிகள் தற்போது விதைப்பு பணிகளை செய்ய முன்வரவில்லை. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இயற்கையை நம்பி சாகுபடி செய்த நிலக்கடலைப்பயிர் நீரின்றி கருகிப்போனது. ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் தப்பிய நிலங்களில் தற்போது நிலக்கடலை பிடுங்கும் பணி தொடங்கி நிறைவடைந்தது.

விவசாயிகளின் நிலக்கடலைக்கு இந்த ஆண்டாண்டிலாவது உரிய விலை கிடைக்குமா எனற எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத விவசாயிகள் கூறுகையில், மழையை நம்பி பயிரிடப்படும் நிலக்கடலை போதிய மழையின்மையால் பரப்பு குறைந்து வருகிறது. தற்போது நான்கில் ஒரு பங்கு மட்டுமே நிலக்கடலை விவசாயமே நடக்கிறது என கவலையுடன் தெரிவித்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்