கரூர்-கொசூர் பொசியாம்பட்டி வழியாக மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

 

கரூர், டிச. 12: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், தமிழ்நாடு பெரும்பிடுகு முத்தரையர் மறுமலர்ச்சி சங்கத்தினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், ஒட்டப்பட்டி பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும், மாணவர்கள், ஆசிரியர்கள், வேறு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் ஆகியோர் பேரூந்து வசதியின்றி சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதன் காரணமாக மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எங்கள் ஊரில் இருந்து கரூர் டூ கொசூர் பொசியாம்பட்டி வழியாக சென்று வந்த தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.மீண்டும் அந்த பேரூந்தை ஒட்டப்பட்டி வழியாக இயக்க கொசூர் ஊராட்சியில் இரண்டு முறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வரை பதில் இல்லை. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு