கரூர், குளித்தலை கூட்டுறவு சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கேடயம்

கரூர், ஆக. 4: கரூர் மண்டலத்தில் கரூர், குளித்தலை சரகங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டார வாரியாக அதிக அளவில் பயிர் கடன்கள், நகை கடன்கள், விவசாய நகை கடன்கள், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் வழங்கியதற்கும், வழங்கிய கடன்கள் முழுவதும் வசூல் செய்த சங்கங்களின் செயலாளர்கள், பொது விநியோகத்திட்ட கூட்டுறவு நியாய விலைக் கடையில் சிறப்பாக பணிபுரிந்த 3 விற்பனையாளர்களுக்கு கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் வரும் 2024 மார்ச் மாதத்துக்குள் ரூ. 5 கோடிக்கு மேல் நடைமுறை மூலதனத்துடன் செயல்படும் வகையில், செயலாளர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கே.எம்.ஆறுமுகம், கூட்டுறவு சார் பதிவாளர்கள், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர், கள மேலாளர்கள், சரக மேற்பார்வையாளர்கள், கரூர் மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை