கரூர் அருகே கடன் பிரச்னையால் ஆடு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

கரூர், ஏப். 13: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள பெருமாள்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம்(58). ஆட்டு வியாபாரி. இவர், கடந்த பல ஆண்டுகளாக ஆட்டு வியாபாரம் செய்து வந்துள்ளதாகவும், தொழில் சம்பந்தமாக பல்வேறு பகுதிகளில் கடன் வாங்கி சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மனநிலையில் இருந்து வந்த செல்வம், கடந்த 11ம் தேதி மாலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், அருகிலேயே, என் தற்கொலைக்கு குடும்பத்தினரோ, தொழில் சம்பந்தமானவர்களோ யாரும் காரணமில்லை. கடன் பிரச்சனைதான் காரணம் என எழுதி வைத்திருந்துள்ளார். செல்வம் எழுதி வைத்திருந்த கடிதத்தை வெள்ளியணை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ராஜபாளையம் அருகே 54 கிலோ குட்கா பறிமுதல்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

பஸ்சில் பெண்களை ஏற்ற மறுத்த டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்