கரூரில் விபத்தை தடுக்கும் பொருட்டு 2 ரவுண்டானா அளவை குறைக்க அதிகாரிகள் ஆய்வு

கரூர் : கரூரில் விபத்துக்களை தடுக்கும் வகையில் கலெக்டர் உத்தரவின்பேரில் 2 ரவுண்டானா அளவை குறைப்பதற்கு அதிகாரிகள் நேற்று ரவுண்டானாவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கரூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் கீழ் பல்வேறு சீர்திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் கடந்த சாலை பாதுகாப்பு வாரம் விழாவின்போது பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கையில் கலெக்டர் பிரபுசங்கர், கரூர் அருகிலுள்ள மனோகரா கார்னர் மற்றும் அமராவதி பாலம் அருகில் உள்ள லைட் ஹவுஸ் கார்னர் ஆகிய இரண்டு ரவுண்டானாவில் அளவையும் குறைத்தால் பொதுமக்கள் பயணத்திற்கு வசதியாக இருப்பதுடன் பயணிகளின் வாகனங்கள் திருப்பி செல்வதற்கு வசதியாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு இரண்டு ரவுண்டானாவில் அளவுகளையும் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனடிப்படையில் கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார், திருப்பூர் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் முரளி ஆகியோர் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா, லைட் ஹவுஸ் கார்னர் ரவுண்டானா ஆகிய இரண்டு பகுதிகளையும் ஆய்வு செய்தனர். ரவுண்டானாக்களின் அளவுகளை குறைவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த பணிகளை உதவி கோட்டப் பொறியாளர்கள், கர்ணன் தமிழ்ச்செல்வன், கதிர்வேல், கோவிந்தன் ஆகியோர் மேற்கொண்டனர்….

Related posts

தஞ்சாவூர் அருகே பாதாள சாக்கடை சரி செய்து கொண்டிருக்கும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

ஆடிப்பட்ட தேடி விதைப்புக்கு நிலத்தை பண்படுத்தும் பணி ஜரூர்: போடி, சின்னமனூரில் விவசாயிகள் தீவிரம்

அணைக்கட்டு அருகே மலைக்கிராமத்தில் உள்ள உறைவிட பள்ளி பாழடைந்த உணவுக்கூட கட்டிடத்தை இடித்து அகற்றவேண்டும்: புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை