கரூரில் ஜூன் 30ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கரூர் கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும், குறைகள் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக புகார்கள் பெறப்படும். அவ்வாறு பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளைகள் விநியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கருர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் 30ம்தேதி மாலை 3 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இந்த நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு