கரூரில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் 5 நாட்களாக காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி

 

கரூர், ஜூன்12: கரூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் கடந்த ஐந்து நாட்களாக காற்று வீசத் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது வெப்ப சலனம் மற்றும் புயல் சின்னம் காரணமாக லேசான அளவில் மழை பெய்து கரூரை குளிர்வித்தது. இருப்பினும், கடந்த 15 நாட்களாக எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கரூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் பதிவாகி வாட்டி வதக்கியது. இதன் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியை சந்தித்தனர்.

எப்போதும், ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழைக் காலம் துவங்கும் என்பதால், ஜூன் முதல் தொடர்ந்து முன்று மாதங்களுக்கு கரூர் மாவட்டம் முழுதும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பலத்த காற்று வீசி வருகிறது. அதன்படி, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கும் வகையில், காற்று எப்போது வீசத் துவங்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களாக கரூர் மாவட்டம் முழுதும் காற்று அதிகளவு வீசத் துவங்கியுள்ளது. இந்த காற்றின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்றே குறைந்துள்ளதால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்