கரூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

 

கரூர், மார்ச்9:கரூர் கடைவீதியில் தனியார் ஓட்டல் அரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் கரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு, பட்டியிலின மக்களுக்கு உள்ள அரசின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்தும், ஊராட்சி மன்ற தலைவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல் , சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் அக்பர்கான், உதவி ஆய்வாளர் பாண்டியன், சிறப்பு அரசு வழக்கறிஞர் லட்சுமணன் , தாட்கோ மாவட்ட மேலாளர் பாலமுருகன், கரூர் வட்டாட்சியர் முனிராஜ் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட ஆதிராவிடர் நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் பெரியநாச்சி நன்றி கூறினார்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்