கருமேனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த பாலங்களை சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம், ஜன. 4: சாத்தான்குளம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கருமேனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுப்பராயபுரம் பாலம் சேதமடைந்த அபாய நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிககை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி பகுதி கருமேனி ஆற்றுப்படுகையில் கருமேனி ஆற்றில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் பாலமும் கட்டப்பட்டு உள்ளது. கருமேனி ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த பாலம் வழியாக புல்லானேரி, கல்லானேரி உள்ளிட்ட உடன்குடி பகுதிக்கு வெள்ளநீர் செல்லும். மேலும் சடையனேரி கால்வாயில் வெள்ளப்பெருக்கு காலங்களில் தண்ணீர் திறக்கும்போதும் இவ்வழியாக தண்ணீர் செல்லும். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் கடந்த 17, 18ம் தேதி ஏற்பட்ட கனமழை காரணமாக கருமேனி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் ஆற்றின் இடையே இருந்த சாலை, பாலம் சேதமானது. இதேபோல் சுப்பராயபுரம் இடையே உள்ள பாலமும் பலத்த சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள், இந்த பாலங்களை பார்வையிட்டு உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்மென விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை