கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை தமிழகத்திற்கு அதிகமாக வழங்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் ஊசி மற்றும் ஆக்சிஜன் சப்ளை அதிகரித்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கருப்பு பூஞ்சை தொற்று மாநிலம் முழுவதும் வேகமாக பரவுகிறது. இந்நோய்க்கான லிபோசோமல் ஆம்போடெரிசின் பி IV ஊசி போன்ற மருந்து தமிழ்நாட்டில் தட்டுப்பாடு உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை அணுகுவதற்கு லிபோசோமல் ஆம்போடெரிசின் பி IV மருந்தை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா