கருப்பு பூஞ்சை குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் நோயை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், ‘‘பெருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் மியூகோர்மைகோசிஸ் நோய் அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிடப்பட வேண்டும். இதன் மூலம் மாநிலத்தின் எந்த மருத்துவமனையிலும்  இந்த நோய் பாதிப்பு இருப்பவர் அல்லது அறிகுறி இருப்பவர் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது….

Related posts

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்