கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

கமுதி, செப்.15: கமுதி அருகே நகரத்தார்குறிச்சி கருப்பணசுவாமி, குபேர விநாயகர், சின்னகருப்பண சுவாமி, சீலைக்காரி அம்மன் பிரதிஷ்டடை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக மூன்று கால யாக சாலை பூஜைகள், கணபதி ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹூதி, மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசை வாத்தியங்களுடன், கடம்புரப்பாடு ஆலயம் வலம் சென்று கருப்பணசாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கருப்பணசுவாமி, சிலக்காரி அம்மன் சுவாமிகளுக்கு கும்ப நீர், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

Related posts

கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

மேல்மருவத்தூர் ஊராட்சியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் என அழைத்து வந்து அதிமுகவில் உறுப்பினராக சேர்க்க முயற்சி: மதுராந்தகம் அருகே பரபரப்பு