கருத்தப்பாலம் பகுதியில் சீரமைப்பு பணி

தூத்துக்குடி, ஜூலை 3: தூத்துக்குடி கருத்தப்பாலம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தது. கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்கள் பழுதடைந்தன. குறிப்பாக பக்கிள் ஓடையில் இருந்து மழைநீர் வெளியேறும் வழிகளில் ஒன்றான கருத்தப்பாலம் குறுகியதாக காணப்பட்டதால், அதனை அதிகாரிகள் உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். தற்போது இந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கருத்தப்பாலத்தையும், ஓடையையும் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சண்முகபுரம் சந்தை ரோடு பகுதியில் நடைபெற்று முடிந்த குடிநீர் குழாய் மற்றும் வால்வு அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். ஆய்வின்போது, மாநகராட்சி அலுவலர்கள், போல்பேட்டை பகுதி திமுக நிர்வாகிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

ஆதிதிராவிடநலப்பள்ளியில் தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணி

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் நடைபயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்

புதுக்கோட்டை புது தெருவில் வரத வீரஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம்