கருணாநிதி நூற்றாண்டு விழா

சேந்தமங்கலம், ஜூன் 4: சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சி, பள்ளிப்பட்டி, உத்திரகிடிகாவல், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி, துத்திக்குளம், அக்கியம்பட்டி ஆகிய இடங்களில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் ராணி, பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, திமுக கொடி ஏற்றி வைத்து, அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நல்லு ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் மணிமாலா, துணைத்தலைவர் கீதா பேரூராட்சி தலைவர் பாப்பு, ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், செல்வம் அபிமன்னன், அம்மாசி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரசு திராவிட மணி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்தபாபு, மாவட்ட பிரதிநிதி வெங்கடேஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், திமுக நிர்வாகிகள் குமரேசன், விஜயகுமார், மனுநீதி சோழன், சுப்பிரமணி, அன்பழகன் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்