கருங்குளம் பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் துவக்கம்

 

செய்துங்கநல்லூர். ஏப். 27: கருங்குளத்தில் வகுளகிரி சேஷத்திரம் என்றழைக்கப்படும் வெங்கடாசலபதி கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி உற்சவம், 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான உற்சவ திருவிழா, நேற்று துவங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 9.10 மணிக்கு பந்தகால் பூஜை நடந்தது. 9.45 மணிக்கு பந்தகால் நடப்பட்டது. 10.15 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் இசக்கியப்பன், ஆய்வாளர் நம்பி, கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி ராமசுப்பன், அர்ச்சகர் ராஜேஷ், சங்கர், சின்னக் கண்ணன், சோசியல் கண்ணன், வெங்கட்ராமன் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் சிறப்பு திருமஞ்சனம், இரவு 9 மணிக்கு தோளுக்கினியான் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், பொன்சப்பரம், குதிரை வாகனத்தில் வீதியுலா, பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம், பொன்னிற சப்பரத்தில் மலை இறங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்