கருங்கல் அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்

கருங்கல், நவ.2: கருங்கல் அருகே கீழ்குளம் பேரூராட்சி தேரிவிளை பகுதியில் பேரூராட்சி அனுமதி பெறாமல் தனியார் தொலைதொடர்பு நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் கீழ்குளம் பேரூராட்சி தலைவி சரளா கோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரூராட்சி தலைவர் குடியிருப்பு பகுதிகளில் பேரூராட்சியில் அனுமதி பெறாமல் டவர் அமைக்கக் கூடாது என்று பணிகளை பொதுமக்களுடன் சேர்ந்து தடுத்து நிறுத்தினார். அப்போது,ஒப்பந்ததாரர் தரப்பில் வேலை செய்வதற்கான இடத்திற்கான அக்ரிமெண்ட்டை காண்பித்தனர்.ஆனால் அது போலியாக தயார் செய்த அக்ரிமெண்ட் எனக்கூறி பேரூராட்சி தலைவர் சரளா கோபால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.இதையடுத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தினர் டவர் அமைக்கும் பணிகளை நிறுத்தி விட்டு திரும்பி சென்றனர். போராட்டகாரர்களுக்கு ஆதரவாக திமுக கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் கோபால் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்