கருங்கல்லில் தரங்கம்பாடி வரைப்படம்-பாதுகாக்க சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை

தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கடற்கரையோரம் தரங்கம்பாடியின் வரைபடம் பெரிய கருங்கல்லில் செதுக்கபட்டு வைக்கபட்டுள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அதை சுற்றுலாத்துறை பாதுகாக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தரங்கம்பாடி வரைபடம் 1730ல் வரையபட்டது. அதன் மாதிரி வரைபடம் கருங்கல்லில் செதுக்கபட்டு கடலில் மூழ்கி விட்ட சலங்கைகாரத்தெருவிற்கு அருகே கடலோரம் அமைக்கபட்டுள்ளது. அதை 12.11.2011ல் டென்மார்க் நாட்டு தூதர் பெர்டிசெவன் திறந்து வைத்துள்ளார். அந்த வரைபடம் செதுக்கபட்ட கருங்கல் போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. சமூக விரோதிகளால் அதில் உள்ள கற்கள் உடைக்கபடும் அவலமும் உள்ளது.மின் விளக்கு இல்லாததால் அந்த பகுதி இருண்டு கிடக்கிறது. வரைபடம் செதுக்கபட்ட கருங்கல்லை சுற்றுலாத்துறை பாதுகாத்து சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பகுதி இருண்டு கிடப்பதால் பேரூராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் மின்வசதி செய்து தர வேண்டும் என்றும் சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை