கரடிபட்டி வேகத்தடை அருகே எரியாத எச்சரிக்கை சிகப்பு விளக்கை சீரமைக்க வேண்டும்

 

அரவக்குறிச்சி, மார்ச் 2: அரவக்குறிச்சி கரடிபட்டி வேகத்தடை அருகே எச்சரிக்கை சிகப்பு விளக்கு நீண்ட நாட்களாக எரிவதில்லை விபத்து ஏற்படுமுன் உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி கரடிபட்டியில் புறவழிச்சாலையும், கரூர் ரோடும் சந்திக்கும் இடத்தில் ஒரு வேகத் தடை உள்ளது. இதற்கு எச்சரிக்கை செய்வதற்காக விட்டு விட்டு எரியும் வகையில் ஒரு சிகப்பு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சாலையில் கரூர் அரவக்குறிச்சி, பள்ளபட்டி, திண்டுக்கல், தாராபுரம், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ஏராளமான நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சந்திக்கும் இடத்தில் உள்ள வேகத் தடைக்கு எச்சரிக்கை செய்வதற்காக விட்டு விட்டு எரியும் வகையில் ஒரு சிகப்பு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இது நீண்ட நாட்களாக எரிவதில்லை.

இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தை குறைப்பது தெரியாமல் வந்து உடனடியாக பிரேக் அடிப்பதால் விபத்திற்குள்ளாகும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. அதுவும் இரவு நேரத்தில் டூ வீலரில் கடக்கும் இரண்டு பேராவது தினமும் விழுந்து அடிபடுகின்றனர். எனவே பெரும விபத்து ஏற்படும் முன்பு அரவக்குறிச்சி கரடிபட்டியில் வேகத்தடை அருகே எச்சரிக்கை சிகப்பு விளக்கை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு