கம்பம் பகுதியில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் மணல் லாரிகள்-பறக்கும் தூசுகளால் விபத்து அபாயம்

கம்பம் : கம்பம் பகுதியில் தார்ப்பாய் மூடாமல் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. தேனி மாவட்டத்தில் 120க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவைகளிலிருந்து கல், ஜல்லி, எம்.சாண்ட் ஆகியற்றை டிப்பர் லாரிகள் மூலம் கம்பம் வழியாக கேரளாவுக்கு ஏற்றிச் செல்கின்றனர். இது தவிர சவடு மண் எடுக்கவும் தனியாருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.இந்நிலையில், தேனி மாவட்டத்தை ஓட்டி உள்ள கேரளாவுக்கு தினசரி டிப்பர் லாரிகளில் இயற்கை வளங்கள் ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் லாரிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், யாரும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால், லாரிகளில் திறந்த நிலையில் கல், மண் ஆகியவறை எடுத்து செல்கின்றனர். காற்று அடிக்கும் போது லாரியிலிருந்து கிளம்பும் கல், மண் துகள் மற்றும் தூசிகள் அவைகளின் பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. இதனால், விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். …

Related posts

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் மூடப்பட்டன

கடலில் மூழ்கி மாயமான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

மருத்துவமனையை பராமரிக்காத டாக்டர் மாற்றம் அமைச்சர் அதிரடி